மூல வாக்குறுதியை நினைவில் கொள்க: மலாய்க்காரர்-அல்லாதாருக்கு அம்னோ அறிவுறுத்தல்

promiseமலாய்க்காரர்-அல்லாதார் சமுதாய  ஒப்பந்தத்தில்  கொடுத்த  “மூல வாக்குறுதி”யை  மறந்து  விடக்கூடாது  என்பதை  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  நினைவுவுறுத்தியுள்ளார்.

நாடு  சுதந்திரம்  பெற்றபோது  மலாய்க்காரர்- அல்லாதார்  குடியுரிமை  பெற  அனுமதித்து மலாய்க்காரர்கள்  தியாகம்  செய்துள்ளனர் என கைரி  இன்று  அம்னோவின்  ஆண்டுக்கூட்டத்தில்  கூறினார்.

பதிலுக்கு மலாய்க்காரர்-  அல்லாதார்  மலாய்க்காரர்களின்  சிறப்புரிமைகளையும்  மலாய்  மொழியைத்  தேசிய  மொழியாகவும்  ,மலாய்  ஆட்சியாளர்களின்  இறையாண்மையையும்  ஏற்றுக்கொண்டனர்.

“ஆனால், அவ்வொப்பந்தத்தை  மதிக்காதவர்கள்  இன்னும் இருக்கவே  செய்கின்றனர்.

“மலாய்க்காரர்கள்  அதை ஏற்றுக்கொண்டு (மலாய்க்காரர்- அல்லாதாரின்) குடியுரிமை  பற்றிக்  கேள்வி எழுப்பாமலும் தாய்மொழிப்  பள்ளிகளை  மூடாமலும்  இருக்கும்போது  அவர்கள் (மலாய்க்காரர்- அல்லாதார்)  மட்டும்  மூல  வாக்குறுதியை  மதிக்காதது  ஏன்?

“மலாய்க்காரர்களின்  சிறப்புச்  சலுகைகள்  இரத்துச்  செய்யப்பட  வேண்டும்  என்று  கூறப்படுவது ஏன்?  மலாய்  ஆட்சியாளர்களின்  இறையாண்மை  பற்றிக்  கேள்வி  எழுப்புவது  ஏன்? மேலும்  தேசிய  மோழியை  அறியாதவர்களும்கூட  இருக்கிறார்கள்”, என  கைரி  கூறினார்.