எம்பிகளின் சம்பளம் 69விழுக்காடு உயர்கிறது

salaryஅடுத்த  ஆண்டிலிருந்து  எம்பிகளின்  சம்பளம்  69 விழுக்காடு  உயர்வதாக  அரசாங்கம்  அறிவித்துள்ளது.

இதன்படி  எம்பிகளின்  அலவன்ஸ்  தொகை  ரிம6,508-இலிருந்து  ரிம11,000  ஆக  உயரும்.

செனட்டர்களின்  சம்பளம்  ரிம4,112  இலிருந்து  ரிம7,000  ஆக  கூட்டப்படுகிறது.

அனைத்துக்  கட்சிகளும் கூடிப்  பேசி   எம்பிகளின்  சம்பளத்தை  உயர்த்த  முடிவு  செய்ததாகக்  குறிப்பிட்ட  பிரதமர்துரை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்,  2002-இலிருந்து   அவர்கள்  சம்பள  உயர்வு  பெறவில்லை  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.