200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்ற அமெரிக்கா: அதிர்ச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_irakஐ.எஸ்.ஐ.எஸ்-யில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அமெரிக்க படைகள் கொலை செய்தது, அந்த அமைப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா தலைமையிலான எஸ்.ஏ.எஸ், (SAS) என அழைக்கப்படும் கூட்டுப் படையினர் தினமும், ஐ.எஸ்.ஐ.எஸ்- யில் எட்டுப் பேரை கொல்வது என திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த திட்டத்தின் படி முதலில் இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் கண்டறிகின்றனர்.

இதன்பின் அப்பகுதிகளுக்கு செல்லும் ஹெலிகொப்டர் படைகளிலிருந்து இறங்கும் ‘குவாட் பைக்’ (Quad Bike) என அழைக்கப்படும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பிரத்யேக பைக், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்திற்கு அருகே சென்று அதிரடி தாக்குதலை நடத்துகின்றது.

இந்த புதுவிதமான தாக்குதலில் நாளொன்றுக்கு 8 தீவிரவாதிகள் உட்பட, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் ஒவ்வொரு நாளும் எந்தப் பகுதியில் எஸ்.ஏ.எஸ். படையினர் தாக்குதல் நடத்துவர் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தெரியாததாலும், அவர்களால் கண்டுபிடிக்க முடியாததாலும் அதிர்ந்து போயுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு மரணபயம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. -http://world.lankasri.com