ஈழ அகதிகள் முகாமில் குடமுழுக்கு நடத்த தடை: காவல் துறையினர் தடியடி- கைது

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை ஈழ அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலின் குடுமுழுக்கு நாளை 27 ந் தேதி வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டு அதற்காக ஒலிபெருக்கி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளனர். முதலில் வாய்மொழியாக நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

காவல் துறையின் அனுமதியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை முதல் யாக பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் நாளை வியாழக்கிழமை மாவீரர் தினம் இருப்பதால் திடீரென் நள்ளிரவில் வந்த டி.எஸ்.பி பாலகுரு தலைமையிலான போலிசார் குடமுழுக்கு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் யாக பூஜைகள் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.

நல்ல நாளில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டே அனுமதி கேட்டு நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அதனை ஏற்காத டி.எஸ்.பி பாலகுரு யாக பூஜை நடத்திக் கொண்டிருந்த குருக்கள்களை அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் இன்று காலை 6.40  மணிக்கு திரண்ட முகாம் மக்கள் சாலை மறியல் செய்யத் தொடங்கினார்கள். அப்போது அங்கு இருந்த டி.எஸ்.பி பாலகுரு மற்றும் போலிசார் அவர்களை கைது செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்இ குழந்தைகள்இ கல்லூரி மாணவிகள் மீது தடியடி நடத்தி அவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முகாம்வாசிகள் கூறும் போது. இன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்இ நாளை மாவீர் தினம் அதனால் குடமுழுக்கு நடத்தக் கூடாதுஇ ஒலிபெருக்கி வைக்க கூடாது என்று தடைவிதித்து தடியடி நடத்தி பெண்களையும் டி.எஸ்.பியே ஈழுத்து சென்று கைது செய்துள்ளார். நாங்கள் குடமுழுக்கு நடத்த கூட தடைவிதிக்க வேண்டுமா.. தமிழக அரசு தலையிட்டு குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.

  – இரா.பகத்சிங். -http://www.nakkheeran.in
TAGS: