நஜிப்: தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படாது; அது மேலும் வலுப்படுத்தப்படும்

najibபிரதமர்  நஜிப்  அப்ல்  ரசாக்,   தேச  நிந்தனைச்  சட்டம் தொடர்ந்து  இருக்கும்  எனக் கூறியதும்  அம்னோ  பேராளர்கள்  எழுந்து நின்று  கரவொலி  எழுப்பி  அவரைப்  பாராட்டினார்கள்.

ஆக, கட்சிக்குள்  கொடுக்கப்பட்ட  அழுத்தத்துக்குப்  பணிந்து அச்சட்டம்  இரத்துச்  செய்யப்படாது  என்ற  முடிவுக்குப் பிரதமர்  வந்திருப்பதுபோல்  தெரிகிறது.

“அச்சட்டம் வைத்துக்கொள்ளப்படும், அத்துடன்  மேலும்  வலுப்படுத்தப்படும்”, என இடிமுழக்கம்  போன்ற  கரவொலிக்கிடையில்  அவர்  அறிவித்தார்.

இஸ்லாத்தையும்  மற்ற  சமயங்களையும்  பாதுகாக்கவும்  சாபா, சரவாக்  ஆகியவற்றின்  பிரிவினை பற்றிப்  பேசுவோரை  ஒடுக்கவும்  அச்சட்டம்  தேவைப்படுவதாக  நஜிப்  விளக்கினார்.