சாலைப் பெயர் மாற்றத்தில் குற்றம் காண்பது ஆட்சியாளர்களைக் குறை சொல்வதாகாது

roadsசாலைகளின் பெயர்களை  மாற்றி  அவற்றுக்கு  சுல்தான்களின்  பெயர்களை  இடும்  அரசாங்கத்தின்  போக்கைக்  குறை  கூறுவது  ஆட்சியாளர்களை  எதிர்ப்பதாகாது.

“கோலாலும்பூரில்   சில  சாலைகளின்  பெயரை  நீக்கும்  அரசாங்கத்தின்  உத்தேசம்  குறைகூறப்படுவதை ஆட்சியாளர்களுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதன்  அடையாளமாகக்  கருத  வேண்டிய  அவசியமில்லை”, என  அரசமைப்பு சட்ட  வல்லுனர்  அப்துல்   அசீஸ் பாரி  கூறினார்.

நேற்று  அம்னோ  இளைஞர் பேராளர்  கூட்டத்தில்  பேசிய  அதன்  தலைவர் கைரி  ஜமாலுடின்  Abdul Aziz Bariஅக்குறைகூறல்  மலாய்  ஆட்சியாளர்களுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கப்படுவதன்  அடையாளம்  என்று  கூறியிருந்தார்.

அம்னோவும்  அதன்  முன்னாள்  தலைவர்  டாக்டர்  மகாதிர்   முகமட்டும்  90-களில்  ஆட்சியாளர்களை  அதிகாரத்தைக்  குறைக்க  இதைவிட  மோசமான  செயல்களில்  எல்லாம்  ஈடுப்பட்டனர்  என்பதை  அசீஸ்  பாரி  நினைவுப்படுத்தினார்.

“ஒருவேளை  அம்னோ  இளைஞர்  தலைவர்  கேஜெ  அவை  பற்றி  அறியாதிருக்கலாம்”, என்றாரவர்..