அம்னோ கூட்டத்தில் மகாதிர்

meetமுன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட், அம்னோ  ஆண்டுக்  கூட்டத்துக்கு  வருவாரா. மாட்டாரா  என்ற  கேள்வி  இருந்துகொண்டே  இருந்தது.

உடல்நலன்  குன்றியிருந்ததால்  கூட்டத்துக்கு  வரும் வாய்ப்பு  இல்லை  என்றே  மகாதிரும்  கூறியிருந்தார்.

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைத் தொடர்ந்து  குறைகூறி  வந்திருப்பதால்  தம்  அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்  மகாதிர் கூட்டத்துக்கு  வர  மாட்டார்  என்றே  பெரிதும்  கருதப்பட்டது.

ஆனால், அனைவரின்  எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில்  மகாதிர்  இன்று  காலை புத்ரா  உலக  வாணிக  மையத்தில்  நடைபெறும்  அம்னோ   கூட்டத்துக்கு  வந்திருந்தார்.