அன்வார் பிஎன்னைக் கவிழ்க்க ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்தார்

anipahவெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்,  2008-இல், பக்கத்தான்  ரக்யாட்  புதிய  அரசாங்கம்  அமைக்க  சாபாவின்  10 எம்பிகளுடன் கட்சிமாறினால்  ரிம100 மில்லியனும்  துணைப்  பிரதமர்  பதவியும்  கொடுக்க  அன்வார்  இப்ராகிம் தரப்பு முன்வந்தது  என  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  இன்று  கூறினார்.

தம்  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவின்  கேள்விகளுக்குப்  பதிலளித்த  அமைச்சர்  தம்முடன்
பேரம்  பேசியவர் அன்வார்  முகாமைச்  சேர்ந்தவரும்  கேஎப்சி  முன்னாள்  தலைவருமான  ஈஷாக்  எனப்  பெயர் குறிப்பிட்டார்.

“மூன்று   தவணைகளுக்கு  எம்பியாக  உள்ள  நான் நம்மை  அவ்வளவு  மலிவாக  நினைத்துவிட்டாரே  என  ஆத்திரமடைந்தேன். ‘திரும்பவும்  அவ்வார்த்தைகளைக்  கூறாதீர்கள்’ என ஈஷாக்கிடம்  சொன்னேன்.

அன்வார் இப்ராகிமின்  ரிம100 மில்லியன்  அவதூறு  வழக்கில்  சாட்சியமளித்தபோது  அனிபா  இவ்வாறு  கூறினார்.