சரவாக் மலேசியாவிலிருந்து விலக நினைப்பது தேச நிந்தனைக் குற்றமல்ல

gasakபிரிவினைக்காக  குரல் கொடுப்பதைத்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  குற்றமாக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  முடிவுக்கு  சரவாக்கில்  எதிர்ப்பு  வலுத்து  வருகிறது.

சாபா, சரவாக்  மாநிலங்கள்  மலேசியாவிலிருந்து  பிரிந்துசெல்ல  கோரிக்கை விடுப்பதைக்  குற்றமாக்கும்  வகையில்  அச்சட்டம்  விரிவுபடுத்தப்படும்  என  அம்னோ  பொதுப்  பேரவையில்  நஜிப்  அறிவித்ததை கெராக்கான்  அனாக்   சரவாக்(காசாக்)  ஏற்கவில்லை.

“சரவாக்  மக்களுக்கு கூட்டரசில்  இருப்பதில்  திருப்தி  இல்லையென்றால்  மலேசியாவிலிருந்து  வெளியேற  இடமளிக்க  வேண்டும்.

“சிங்கப்பூர் மட்டும்  கூட்டரசிலிருந்து  வெளியேற  எப்படி  அனுமதிக்கப்பட்டது”, என  காசாக்  தலைவர்  அபுன்  சூய்  அன்யிட்  வினவினார்.