‘கிள்ளிங்’என்று சொன்னவருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்

reportகடந்த  வார  அம்னோ  பேராளர் கூட்டத்தில் இந்தியர்களை  இழிவுபடுத்தும் சொல்லைப்  பயன்படுத்திய  பெர்மாத்தாங்  பாவ்  அம்னோ  தலைவர்  ஜைடி  முகம்மட்  சைட்-டுக்கு  எதிராக    நாடு  முழுக்க  போலீஸ்  புகார்  செய்யும்  இயக்கமொன்று  தொடங்குகிறது.

முதல் புகார் இன்று  கிள்ளானில்  தமிழர்  செயல்படையால்  செய்யப்பட்டது

“கிள்ளிங்”  என்று  சொல்லி  ஜைடி இந்தியர்களை  “ஆழமாகக்  காயப்படுத்தியும்  இழிவுப்படுத்தியும்” இருக்கிறார்  என மலேசிய  இந்தியர்  முற்போக்கு  சங்க(மிபாஸ்)  தலைமைச்  செயலாளர்  எஸ்.பாரதிதாசன்  மலேசியாகினியிடம்  கூறினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்துக்கொள்வதில்  மிகவும்  ஆர்வம்  கொண்டிருப்பதால்  ஜைடி-மீது  குற்றவியல்  சட்டம்,  தேச  நிந்தனைச்  சட்டம் இரண்டின் கீழும்  குற்றம்  சாட்ட  வேண்டும்  எனப் பாரதிதாசன்  குறிப்பிட்டார்.

இதே  அம்னோ  பேராளர்தான் பினாங்கில் சீனர்களின்  வெற்றிக்குச்  சட்டவிரோத  தொழில்கள்தாம்  காரணம்  என்று  சொல்லிவிட்டு  இப்போது  செய்தித்தாள்கள் தாம்  கூறியதைத்  திரித்துக்  கூறிவிட்டதாகச்  சொல்லிக் கொண்டிருப்பவர்.