இந்தியர்களுக்கு 14 வது பொதுத்தேர்தலின் இடியும், மின்னலும் !

contentwriting_1இண்டராப் இன்று தோற்று நிற்க காரணம் அரசியல் இலக்கு இல்லாத மின்மினி பூச்சித்தனம் என்பேன். உதயக்குமார் சொன்னது போல பாமர மக்களின் போராட்டம் வீதியோடு நின்றது. பயன் படுத்திக்கொண்ட சில உயர் வர்க்க ஆசாமிகள் இன்றும் பிரிவினையில் சந்தர்ப்ப அரசியல் ஆளுகின்றனர். உதாரணதிற்கு நல்ல கருப்பன் , தநேந்திரனை சொல்லலாம் . உலக இனப்போராட்ட அரங்கில் அரசியலற்ற குருவி ஊர் போய் சேராது என்ற கதிதான். ஆனால் அரசியலில் விடியல் புழுக்களை   பிடிக்கும் குருவிகள் கெட்டிக்கார கழுகுகள் எனலாம்.

மக்கள் சக்தி பத்தரிகையில் “நேரமாச்சி” என்ற தொடரில் என் இந்த அரசியல் அவசர ஆதங்கத்தை எழுதி இருந்தேன். PR குறிப்பா PKR நம்மை  ஏமாற்றி விடும் என்ற அபாயத்தை மறைமுகமாக எழுதியும் இந்த இன எதிரணி தலைவர்கள் உணரவில்லை. அல்லது அவரவர் அரசியல் பதவிக்கு பதுங்கினர் என்பதுதான் உண்மை.

அந்த மீதமுள்ள நால்வரால் இண்ட்ராப் தோல்வி என்பதை எங்களால் ஏற்க முடியாது காரணம்.  கூட்டணியாலும் முன்னணியாலும் ஊர் இரண்டு பட்டதால் அரசியல் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதை நஜிப்பும் அனவரும் உறுதி படுத்தினர். அதிலே குழம்பிய இரு குட்டைகளில் மீன் பிடிக்க நினைத்து இரு பெரும்  கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்டு பேரம் பேசிய விதத்தை மக்கள் வெறுத்தனர்.அதில் கடசியில் BN னுடன் சோரம் போனது …மாற்று அரசியலை நோக்கி இருந்த எங்கள் வேகத்தை மழுங்கசசெய்து அடிப்படைக்கே ஆபத்தை உண்டுபண்ணியதுதான் மோசமான முடிவாகும்.

மலேசிய பாமர இந்தியர்கள் /தமிழர்களை பொறுத்தவரை இண்டராப் தனித்து போட்டி போட்டு இருந்தால் நடந்து  முடிந்த
13 பொதுத்தேர்த்தல் வழி BN னுக்கும் PR ருக்கும்  ஒரு நல்ல பாடத்தை தந்து நம் அரசியல் வலுவை மதிக்கப்பட  செய்து இருக்கலாம். ஜெயிக்காமல் போனாலும் உடச்சி ஊனமாக்கி இருக்கலாம். அச்சமாவது மிஞ்சி இருக்கும்.இப்போது விக்கி நிற்கும் தொங்கு நிலை இந்த சமுதாயத்துக்கு ஏற்பட்டு இருக்காது. நமது மக்களை ஏசுவதில் ஏக்கம்தான் மிச்சம். அவர்கள் தேவைகளின் அடிமைகள். வாழ்வாதாரத்தின் அவசியங்கள். இது இன்னும் தொடரும்.காரணம் நமக்கு தெளிவான தலைவன் இல்லாமையை இவர்கள் உணர்ந்தவர்கள்!

பத்திரிக்கைகளின்  தளர்ச்சி தன செய்திகளால்  இனிமேல் இண்டராப் நிலை குறிப்பா அரசியலற்ற நிலையால் இந்தியர்கள் BN பக்கம் அல்லது PR பக்கம் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் அரசியல் “மரியாதையை” என்பதை இழந்த இனமாக வாழ நேரிடும்.

இதனால்தான்  14 வது பொதுததேர்தலுக்கு இன மான அரசியல் துணிச்சல் மிகு உணர்வுள்ள ஒரு இயக்கம் வேண்டும். அல்லது இந்தியன் சார்பு கட்சிகள் முழுமையாக கூட்டணியில் அல்லது முன்னணியில் இணைத்தால் மட்டுமே சமுதாயத்தின் அடுத்த கட்ட துடுப்பை அரசியல் நகர்த்த முடியும்.

காலமில்லை ஆக…வெளிப்படையாக உரிமையாக பேசுவோம். மலேசிய இந்தியர்களை /தமிழர்களை பொறுத்தமட்டில் இண்டராப் முடிந்தது…..PKR இல் இந்தியர் தலைவர்கள் யாருமில்ல …ம இ கா தொட்டில் ஆடுகிறது…. DAP யில் யாரையும் காணோம்….ஜனநாயக
ம இ கா கூஜா  …மக்கள் சக்தி இதுவரை ஒன்னும் செய்யா ஜடம்…..IPF நாலு நம்பர் குலுக்கு ……மக்கள் நீதி ஒரு இருண்ட அறை…..PPP புதிய ஏப்பத்தில் இந்தியர் என்கிறது….இப்படி சலித்து பார்க்கையில் மண்ணும் மணலுமாய் மலேசிய இந்தியர்களின்  அரசியல் நிலை சிக்குகிறது.

மாற்றம் வேண்டும் என்று முக்கி முக்கி குதித்த சமுதாய அரசியல் தலைவர்கள் இப்போது புருவத்தை சொரிந்து இந்த சமுதாயத்தை அடுத்த ஆஸ்ரம மரத்தடியில் வைக்க யோசிக்கின்றனர் என்ற பயம் வந்துள்ளது.

இதற்கு நமக்கு அரசியல் தீர்வுதான் என்ன? நமக்கு யார் அந்த அரசியல் “ஒத்த” singal தலைவர் ? அவரை கண்டு பிடிக்க மேலே சொன்னவர்கள் கை கோர்பார்களா?  இவர்களில் யார்தான் சிதறிக்கிடக்கும் குண்டு மணிகளை கட்டுவது ?  14 வது பொதுத்துத்த்தேர்தல் வர 39 மாதங்கள் உண்டாம். யாரை எங்கு வைப்பது என்று யாருக்கும் புரியலே இங்கு …. என்ற தவிப்புதான் இந்த அலசலின் பார்வை.

சமுதாய முக்கியத்துவம் பேசும் இவர்கள், ஏன் இணைவதில்லை?
பொருளாதரம் வேண்டும் / மக்கள் தொகை வேண்டு/ தமிழ் மொழி வேண்டும்/ நமது கலை காலச்சரம் வேண்டும் என்றெல்லாம் மாநாடு கூட்டும் இவர்கள் ஏன் தனி தலைமைத்துவ திறனாய்வு மாநாடு கூட்டுவதில்லை? இவர்கள் ஒத்து போவதில்லை ஆனால் மக்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கூப்பாடு வாசிப்பதில் என்ன நியாயம்?

தனி தனியே சந்திக்கும் போதெல்லாம் நாகரீகமாக கை குலுக்கி பேசிக்கொள்ளும் இவர்கள், கட்சி என்றதும் கடிக்கும் துரோகம்தான் என்ன?  டதோ பட்டங்களும், செனட்டர் பதவிகளும் ,  வணிக சுரங்கங்களும் போதுமென்றால் அப்படி உச்சத்தில் போய் நின்று துயிலும் எந்த வெற்றியாளரையும் காண முடியவில்லயே ?

அரசியலே தெரியாத ஒருவர் சென்ற வாரம் இந்துஸ் அறவாரியம் அமைத்து அரசிடம் 50 லட்சம் வாங்கி விட்டார். இவர்தான் மைக்காவையும் வாங்கினார்!  மைக்க லாபத்தை அறவாரியத்தில் போடுவேன் என்றார். அதை யாரும் கேக்க வில்லை. ராமசாமி தமிழ் மாநாட்டில் ஏவினார் . என்ன கேக்க வேண்டுமோ அதை கேக்க வில்லை…..தமிழர்களிடம் தலைமைத்துவம் இல்லை என்கிறார்.அடையாளத்தை தேடி என்கிறார். இலக்கிய  ஞானோதயம் செய்வது தலைமைத்துவமா ? தரமிலையா? இதுவரை சொல்லாத அடையாளங்களா?

யானைகள் புகும் இடம் தெரியாமல் எலிகள் வேட்டைக்கு  வலை பின்னும் இன்றைய மலேசிய இந்தியர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒருத்தரையும் காணோம் என்பதுதான் வெறிச்சோடிய விடை. பிரபாகரன் போல சிந்திக்காமல் பிரபாகரனை பேசி புண்ணியமில்லை   விடியலுக்கு வெளிச்சம் தர ஒரு புதிய அரசியல் சூரியன் உதிக்க வேண்டும் என்பது நமது ஆசை. முதலில் யார்? பிறகு எப்படி என்று சிந்திக்கலாம் …. இது நடக்க இன்றைய பழசுகள் பவித்தரமாய் ஒதுக்கள் பட வேண்டும். இந்த இடிக்கும் மின்னலுக்கும் இவர்கள் தயார் என்றால் முதல் படி கிளியர் ! அடுத்த
புயலை சந்திக்க இளையோர் இணைய வேண்டும். யார் அந்த விவேங்கை ?

ஆவலுடன், உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம் மலேசியா.

-Pon Rangan
[email protected]