மகாதிர்: பிரதமராக இருந்தபோது குறைகூறுவோர்மீது வழக்கு தொடுத்ததில்லை

criticமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தாம்  பதவியில்  இருந்தபோது  தம்மைக்  குறைகூறியவர்கள்மீது  சட்ட  நடவடிக்கை  மேற்கொண்டதில்லை  என்றார்.

“நீதிமன்றம்  போனதில்லை. (குறைகூறுவோருக்கு) பதில்  சொல்வேன்.

“நான்  காரியங்களைச்  சரியாகச்  செய்திருந்தால்  எதற்காக  பயப்பட  வேண்டும்?”, என்றவர்  வினவினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  எதிரணி  எம்பிகள்  டோனி  புவா-வுக்கும்  ரபிஸி  ரம்பி-க்கும்  எதிராக  சட்ட  அறிவிக்கைகள்  அனுப்பியிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

என்றாலும், சட்ட  நடவடிக்கை  எடுப்பது நஜிப்பின்  உரிமை.

“ஆனாலும், அரசியல்வாதிகள் சாடப்படுவது, குறைகூறப்படுவது, அவதூறு கூறப்படுவது  எல்லாம்  சகஜம்தான்”, என மகாதிர்  குறிப்பிட்டார்.