அல்லாஹ்’விவகாரம் பற்றிய நேர்காணலுக்காக பிஎப்எம்-க்கு அபராதம்

bfm‘மலேசிய  தொடர்பு, பல்லூடக  ஆணையம்  பிசினஸ் ரேடியோ நிலையத்துக்கு ரிம10,000  அபராதம்  விதித்துள்ளது.

2013, அக்டோபர்  21-இல்  இஸ்லாமிய  கல்விமான்  ரேஸா  அஸ்லானின்  நேர்காணலை  ஒலியேற்றியதற்காக  இந்த  அபராதம். அந்நேர்காணலில் ரேஸா, மலேசியாவில்  முஸ்லிம்-அல்லாதார்  ‘அல்லாஹ்’  என்ற  சொல்லைப்  பயன்படுத்தத்  தடை விதிக்கப்பட்டிருப்பதைக்  குறை  கூறியிருந்தார்.