ஹுடுட் சட்டம் கொண்டுவருவதில் பாஸ் பின்வாங்காது

kelகிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தைக்  கொண்டுவருவதில்  உறுதியாக  இருப்பதாக  பாஸ்  இன்று  மீண்டும்  வலியுறுத்தியது.

அதேவேளை,  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்ற  விரும்பினால்  பக்கத்தான்  ரக்யாட்  ஹுடுட்டைக்  கொண்டுவரும்  பாஸின்  முயற்சியை  நிராகரிக்க  வேண்டும்  என்று  டிஏபி  ஆண்டுக்கூட்டத்தில்  கூறியதற்காக  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்-கையும்  அது  சாடியது.

ஹுடுட்  அமலாக்கம்  பாஸ்  போராட்டத்தின்  மையக்  கூறுகளில்  ஒன்று  எனக்  குறிப்பிட்ட  கிளந்தான்  பாஸ்  இளைஞர்  தலைவர்  அஹ்மட்  பாத்லி  ஷாரி,  அதில்  விட்டுக்கொடுப்பதற்கில்லை  என்றார்.

“இவ்விவகாரத்தில்  கிளந்தான்  அரசு  பின்வாங்காது  என நம்புகிறோம். 1993-இலேயே,  அதாவது  பக்கத்தான்  உருவாவதற்கு  15 ஆண்டுகளுக்கு  முன்பே  ஹுடுட் திட்டம்  மாநில  சட்டமன்றத்தில்  முன்வைக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.