அஸ்மின் இன்னும் அன்வாரின் கூட்டை விட்டு வெளிவரவில்லை

profசிலாங்கூர்  மந்திரி  புசார்  இன்னமும்  அன்வாரின்  செல்வாக்குக்கு  உட்பட்டவராகத்தான் இருக்கிறார்  என்கிறார்  அரசியல்  விமர்சகரான  பேராசிரியர்  முஸ்தபா  இஷாக்.

மந்திரி புசார்  அஸ்மினின் 100வது நாள்  நெருங்கி  வரும் வேளையில் அவர்  சிலாங்கூரை  எந்தத்  திசையில்  செலுத்திக்  கொண்டிருக்கிறார் என்பதற்குத்  தெளிவான  அறிகுறியே  இல்லை என  அப்பேராசிரியர்  கூறினார்.

“அவர்  யாரிடமோ கட்டுப்பட்டுக்  கிடப்பதுபோலத்  தெரிகிறது. இன்னும்  அவர்  தம்  அரசியல்  குருவின்  கூட்டிலிருந்து  வெளிவரவில்லை.

“அன்வாரின்  செல்வாக்கிலிருந்து  விடுபட  முடியாதவராக  இருப்பதுபோலத்தான்  தோன்றுகிறது”, என  முஸ்தபா  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அஸ்மின்,  அன்வார்  சொல்படி  நடந்து  சிலாங்கூரை  நிர்வகிப்பதில்  சொந்தத்  திறனைக்  காண்பிக்காமல்  இருப்பது  நல்லதல்ல  என்றாரவர்.

“ஒரு  நம்பத்தக்க  மந்திரி  புசாராக,  அப்துல்  காலிட்  இப்ராகிமைவிட  சிறந்தவராக  விளங்க  நினைப்பவர்  இப்படி  இருப்பது  சரியல்ல.

“இதுவரை அவரின்  சொந்த  திறமையோ  துணிச்சலோ  பளிச்சிடவில்லை”, என்றவர்  சொன்னார்.

புதிய மந்திரி  புசார்  சிலாங்கூர்  பிரச்னைகளுக்குத் தீர்வு  காண்பதை  விடுத்து  பிரச்னைகளிலிருந்து  தப்பி  ஓடவே  பார்க்கிறார்  எனவும்  முஸ்தபா  கூறினார்.