ஹுடுட்டால் கவனம் திசைமாறக் கூடாது: ரபிஸி அறிவுறுத்து

rafiziஹுடுட்  சர்ச்சையால்  பக்கத்தான்  ரக்யாட்  தலைவர்களின்  கவனம்  திசைதிரும்பி  விடக்கூடாது  என  பிகேஆர்    தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“இந்தக்  கருத்து  வேறுபாடு 1999இல் பாரிசான் அல்டர்னேடிப் (மாற்று  பாரிசான்) தோன்றிய  காலம் தொட்டே  இருந்து  வருகிறது.

“மக்களின்  நலனுக்கே  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என  நான்  நினைக்கிறேன்”, என்று  ரபிஸி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

டிசம்பர்  29-இல் கிளந்தான்  அரசு,  அதன்  சிறப்புச் சட்டமன்றக்  கூட்டத்தில்  தாக்கல் செய்யவுள்ள  ஹுடுட் சட்டத்தின்  பிரதிக்காக  பிகேஆர்  காத்திருப்பதாக  அவர்  சொன்னார்.

அதற்குள்  கட்சி  உறுப்பினர்கள்  அவசரப்பட்டு  கருத்துரைக்கக்  கூடாது.

“நிலைமை  மோசமாக்கும்  வகையில்  எதையும்  சொல்லி  வைக்காதீர்கள்”, என்றாரவர்.