எஸ்ஐஎஸ்: ரிதுவானின் சிந்தனை பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும்

sisசர்ச்சைக்குரிய   ரிதுவான்  டீ  அப்துல்லா போன்ற  கல்வியாளர்கள்  முன்வைக்கும்  வாதங்களை  எதிர்க்காவிட்டால் மலேசியாவிலும்  இஸ்லாமிய  அரசு(ஐஎஸ்)  போன்ற  தீவிரவாதக்  குழுக்கள்   தலையெடுக்கலாம்   என  ஒரு   என்ஜிஓ  எச்சரிக்கிறது.

“இஸ்லாத்தில்  ‘மிதவாதம்’ என்றால்  ‘அல் வசத்தியா. அது  மார்க்கத்தின்  முக்கியமான  அங்கம். அதிலிருந்து  விலகிச்  செல்லும்போதுதான்  ‘பயங்கரவாத  எண்ணங்கள்’ உருவாகின்றன”,  என  இஸ்லாத்தில்  சகோதரிகள் (எஸ்ஐஎஸ்) அமைப்பின்  ஆய்வாளர்  அபிக் முகம்மட்  நூர்  கூறினார்.

அதுவே  பின்னர்  பயங்கரவாதச்  செயல்களுக்கும்  இட்டுச்  செல்லலாம்.

“மலேசியாவில்  ஐஎஸ்  போன்ற  பயங்கரவாத  அமைப்புகள்  இல்லை.  ஆனால், ரிதுவான்  போன்றவர்களின்  சிந்தனைகளைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால்  மலேசியாவிலும்  ஐஎஸ்  உருக்  கொள்ளலாம்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ரிதுவான்,  சினார்  ஹராபான்  நாளிதழில்  எழுதிய  கட்டுரை  ஒன்றில் ‘மிதவாத  முஸ்லிம்’  என்பதே  இல்லை  எனக் குறிப்பிட்டிருந்தது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.