ஜனவரியில் எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்க்கிறார் துணை அமைச்சர்

maslan2015  ஜனவரியில்  ரோன் 95,  ரோன் 97, டீசல் ஆகியவற்றின்  விலை  குறையலாம்  என  நிதி  துணை  அமைச்சர்  அஹமட்  மஸ்லான்  எதிர்பார்க்கிறார்.

ஆனால், எரிபொருள்  விலை  குறைந்தாலும் பொருள்களின்  விலைகள்  குறைவதில்லை, அதுதான்  பிரச்னை என்றவர்  குறைப்பட்டுக்  கொண்டார்.

“எனவே, இவ்விவகாரத்தில்  வணிகர்களும்  வியாபாரிகளும்  பொறுப்புடன்  நடந்து  கொள்ள  வேண்டும்  எனக் கேட்டுக்கொள்கிறேன். செலவு  குறையும்போது  பொருள்களின்  விலைகளைக்  குறைப்பது  அவர்களின்  பொறுப்பு”, என்றாரவர்.