ஹுடுட் விவகாரத்தில் கிட் சியாங் பக்கத்தானிலிருந்து விலகத் தயாரா? கெராக்கான் சவால்

cheahபாஸ்  கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஹுடுட்  சட்டவரைவைத்  தாக்கல்  செய்வதைத்  தடுத்து  நிறுத்த  முடியாது  போனால் பக்கத்தான்  ரக்யாட்டிலிருந்து  வெளியேறத்  தயாரா  என கெராக்கான்  லிம் கிட்  சியாங்-கும்  டிஏபி- க்கும்  சவால் விடுத்துள்ளது.

டிசம்பர்  29-இல், கிளந்தான்  சிறப்புச்  சட்டமன்றக்  கூட்டம்  ஹுடுட்  பற்றி விவாதிக்கவிருக்கும்  வேளையில் டிஏபி  பெருந்  தலைவர் பொதுமக்களின்  கவனத்தைத்  திசைதிருப்பும்  முயற்சியில்  ஈடுபடுகிறார்  என  கெராக்கான்  துணைத் தலைவர்  சியா  சூன்  ஹாய்  குறை  கூறினார்.

கூட்டரசு  அரசமைப்பு  முன்எப்போதுமில்லாத   வகையில்  பெரியதொரு சவாலை  எதிர்நோக்கி  இருக்கும்போதுகூட  லிம்மும்  டிஏபி-யும்  பிஎன்  உறுப்புக்கட்சிகளைக்  குறைகூறும்  “பொறுப்பற்ற  அரசியல்  பேச்சுகளை”ப் பேசிவருவது  ஏமாற்றமளிப்பதாக  சியா  கூறினார்.