வீராப்பு பேசும் பெர்காசாவுக்கும் இஸ்மாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் துணிச்சல் உண்டா?

rafiziபெர்காசாவும்  ஈக்காத்தான் முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வும்  கூறிக்கொள்வதுபோல்  அவற்றுக்கு மலாய்க்காரர்களிடையே  மகத்தான  ஆதரவு  இருப்பது  உண்மையானால்  தேர்தலில்  போட்டியிடத்  தயாரா  என  பிகேஆர்  சவால்  விடுத்துள்ளது.

“பெர்காசாவும்  இஸ்மாவும்  அவற்றின்  அதி  தீவிர  வலச்சாரி, இனவாதக்  கருத்துகளுக்கு  சமுதாயத்தில்  வரவேற்பு  உள்ளதாக  நம்பினால்  ஜனநாயக  முறையில்  அதைச்  சோதித்துப் பார்க்கலாமே”, என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர் ரபிஸி  ரம்லி  கூறினார்.

பெர்காசாவை  ஓர்  அரசியல்  கட்சியாகப்  பதிவு செய்ய  வேண்டும்  என  அதன்  உதவித்  தலைவர்  அப்துல்  ரஷிட்  அப்துல்  ரஹ்மான  விருப்பம்  தெரிவித்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது பாண்டான்  எம்பி இவ்வாறு  கூறினார்.