கைரி வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது

b kawanசட்டம்  செயல்படும்  விதம்  தெரியாவிட்டால்  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  வாயை  மூடிக்  கொண்டிருப்பதே  நல்லது  என்கிறார்  பத்து  கவான்  அம்னோ  தொகுதித் துணைத்  தலைவர் கைருடின்  அபு ஹசன்.

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டி)த்துக்கு  எதிரான  புகார்  தொடர்பான  “உண்மைகளை” போலீசிடம்  மட்டுமே  தெரிவிக்க  முடியும்  என  கைருடின்  கூறினார்.

“யாரும் அந்த  உண்மைகளை  வெளியில்  சொல்லிக்  கொண்டிருக்க  மாட்டார்கள். போலீஸ்  வாக்குமூலத்தில்தான்  அவை  தெரிவிக்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

1எம்டிபிக்கு  எதிரான  கைருடினின்  குற்றச்சாட்டு  பலவீனமானது  என்று இளைஞர்,  விளையாட்டு  அமைச்சருமான  கைரி  நேற்று  கூறியிருந்ததற்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

“இதுவரை  அது  உண்மை  என்பதற்கு  எந்த  ஆதாரத்தையோ  வாதத்தையோ  அவர்  முன்வைக்கவில்லை”, என  கைரி  கூறியிருந்தார்.