பிகேஆர்: ஹுடுட் பற்றி பேசுவதை பாஸ் தடுக்கக் கூடாது

latefahபாஸ்  தலைவர்கள்,  அக்கட்சி ஹுடுட்  சட்டம்  கொண்டு வருவது  பற்றிக்  கேள்வி  கேட்கும்  முஸ்லிம்களின்  சமய  நம்பிக்கையைக்  கேள்விக்குரியதாக்குவதை முதலில்  நிறுத்த  வேண்டும்  எனக்  கூறும்  பிகேஆர்  அப்படிக்  கேள்வி  எழுப்புவதை  ஷியாரியா  தடுக்கவில்லை  என்கிறது.

“பாஸ்  கட்சி ஹுடுட்  கொண்டுவருவது  பற்றி  முஸ்லிம்கள்  கேள்வி  கேட்டாலோ  சந்தேகம்  தெரிவித்தாலோ  அவர்களின்  சமய  நம்பிக்கை  குறித்து  கேள்வி  எழுப்புவது  ஏற்புடையதல்ல.

“முஸ்லிம்கள்  ஹுடுட்  பற்றி  விவாதிப்பதை  ஷியாரியா  தடுக்கவில்லை”, என  பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லத்திபா  கோயா  கூறினார்.

பாஸ்  கிளந்தான் ஹுடுட் பற்றி  விவாதிக்க  அவசர சட்டமன்றக் கூட்டம்  நடத்துவது,  அதுவும்   அம்னோ 1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)ச்  சர்ச்சை  போன்ற  கடுமையான  சவால்களை  எதிர்நோக்கும்  நேரத்தில்  அக்கூட்டத்தை  நடத்துவதையும்  லத்திபா  சாடினார்.

ஹுடுட்  விவகாரத்தை  எழுப்பியதன்வழி 1எம்டிபி  ஊழல்மீது  செல்ல  வேண்டிய  மக்களின்  கவனத்தைத்  திருப்ப  பாஸ்  அம்னோவுக்கு  உதவியுள்ளது  என்றும்  அவர்  கடிந்து  கொண்டார்.