அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்

congressபுதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், ஆசிரம சகோதரிகள் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும், புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், ஆசிரம சகோதரிகள் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும், புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட 16 இயக்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. இளைஞர் காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டசபையை முற்றுகையிட்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடத்தினர்.

 

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயன்றதில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டன.

அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி சட்டசபையை முற்றுகையிட்டவர்கள் கைது

 

 

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை மத்திய அரசே ஏற்று நடத்த கோரியும், பாதிக்கப்பட்ட ஆசிரம பெண்களை முதல்வர் ரங்கசாமி இதுவரை சந்தித்து ஆறுதல் கூட கூறாததை கண்டித்தும் புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட கம்பன் கலை அரங்கம் அருகே திரண்டனர்.

 

பின்னர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அங்கு சட்டசபையை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரசார் சட்டசபை படிகட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை மத்திய அரசே ஏற்று நடத்த கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

-http://www.nakkheeran.in

TAGS: