தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை இரு தரப்புமே தெளிவாக முன்வைக்கவில்லை: சுமந்திரன்

SumanthiranTNAதமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை ஆளும் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ அல்லது எதிர்க்கட்சியோ தெளிவாக முன்வைக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது பத்து லட்சம் வரையிலான வாக்காளர்களை கட்டுப்படுத்தும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இதுவரையில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

போரின் பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளிக்காட்ட முயற்சிக்கின்றது. எனினும், இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை.

பலாலி பிரதேசத்தில் 6500 ஏக்கர் வரையிலான காணிகளை அரசாங்கம் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்தும் எம் மக்கள் இடம்பெயர் முகாம்களில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் வடக்கு மக்கள் மீளவும் போர் ஒன்றை தொடுக்க வாய்ப்பு கிடையாது என எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: