லிங்கா படவசூல் பற்றி அவதூறு பரப்பினால் வழக்கு: படநிறுவனம் அறிக்கை

lingaaaaரஜினி இருவேடங்களில் நடித்த லிங்கா படம் கடந்த 12–ந்தேதி ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 700 தியேட்டர்களில் திரையிரப்பட்டு உள்ளது. ‘லிங்கா’ படம் ரிலீசான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

தொடர்ந்து வசூல் குவிப்பதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையில் ‘லிங்கா’ படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சென்னையில் திரண்டு நஷ்டத்தை ஈடுகட்டும் படியும் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பட நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் ‘லிங்கா’ படத்தை விநியோகம் செய்துள்ள வேந்தர் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான தகவல்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள்.

லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டு தேர்வு நடப்பதாலும், தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டதாலும், எதிர்பார்த்த அளவைவிட சற்று வசூல் குறைந்தது.

ஆனால் நேற்று மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு சாட்சி.

லிங்கா மக்களுக்கு பிடித்த படம், விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே இப்படத்தின் வசூல் பற்றிய எல்லா விவரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது.

மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

-http://123tamilcinema.com

லிங்கா விமர்சனங்களுக்கு கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்

-http://cinema.nakkheeran.in