சுப்ரா: மஇகாவில் பிரச்னைகள் இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்க முடியாது

subமஇகாவில்  பிரச்னைகளே  இல்லை  என்று  தொடர்ந்து  மறுத்துக்  கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை. பிரச்னைகளுக்கு  இயன்ற  விரைவில்  தீர்வு  காண்பதே  அறிவுடைமையாகும்  என  கட்சித்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார்.

“இனியும்  மறுத்துக்  கொண்டிருக்க  முடியாது.   பிரச்னைகள்  இல்லை  என்றால் மக்கள்  எதற்காக  சங்கப்  பதிவதிகாரியிடம் (ஆர்ஓஎஸ்)  செல்ல  வேண்டும்? பிரச்னைகள்  இல்லை  என்றால்  ஆர்ஓஎஸ்  எதற்கு  விளக்கம்  கேட்டுக்  கடிதம்  எழுத  வேண்டும்”, என  சுப்ரமணியம்  வினவினார்.

ஆர்ஓஎஸ் மூன்று  உதவித்  தலைவர்கள்  பதவிக்கும்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்களுக்கும்  புதிய  தேர்தல்  நடத்தும்படி  உத்தரவிட்டுள்ளது. அந்த  உத்தரவுப்படி  நடப்பதா,  வேண்டாமா என்று  கட்சி  இன்னும்  முடிவு  செய்யவில்லை.

கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  அண்மையில்  த ஸ்டார்  நாளேட்டுக்கு அளித்த  நேர்காணலில்  கடந்த  ஆண்டு  மலாக்காவில்  நடந்த  கட்சித்  தேர்தலில்  எல்லாம்  முறையாகவே  நடந்திருப்பதாக  தற்காத்துப்  பேசியுள்ளார். ஆர்ஓஎஸ்  உத்தரவில்தான்  முரண்பாடுகள்  காணப்படுவதாக  அவர்  சொன்னார்.