தமிழ் /தமிழர் நாகரிகத்தின் உச்சங்கள்…. கண்டெடுத்த கட்டுரை குறிப்புகள்.

KumariKandam

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 20,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர – சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி – ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி – ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று – என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் – என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.

19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை – இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் – என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?

20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் மொழி, உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் கொண்ட நம் உயிர் மொழி ,இந்த உலகம் இருக்கும் வரை வாழ வைக்க வேண்டும். இதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாய் கொள்ளவேண்டும் …

பொன்.ரங்கன்