தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?

contentwriting_1அப்படி இப்படி என்று தமிழர் புத்தாண்டு தை மாத பொங்கல் விழாவோடு தொடங்குகிறது என்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்த்து விட்டனர். இன்று 10/1/2015 மின்னல் FM கேட்டுகொண்டு இந்த தலைப்பை துவக்கினேன். விளமபர படைப்பான ஒலியில் உலாவில் ஆறுமுகம் அவர்கள் ஒரு குறிப்பை சொன்னார். அதாவது பரமசிவம் என்ற அபூர்வாஸ் உரிமையாளர்  ராசிபலன் சித்திரை மாதத்தில்தான் தெரியும்,,, ஆக இப்போது சொல்வது சரிபடாது என்று போட்டார் ஒரு போடு. தமிழர்கள் வழிபாட்டில் சோதிடம் ராசிபலன் அல்லது எண் கணிதமெல்லாம் இருக்கையில் ஆரியர்கள் மாதமான சித்திரையில் தான் தமிழ் ராசிபலன் வரும் என்றால் சனி பெயர்ச்சியில் வாசிக்கப்படும் சோதிடம் என்பது என்ன?

இந்தக்கேள்வியோடு தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த தலைப்பை  நீண்டு எழுதிக்கொண்டே போகலாம். நம்மவர்களுக்கு படிக்க நேரமில்லை என்பதால் பலரின் ஆசைப்படி என் கட்டுரைகளை சுருக்கி எழுத முயல்கிறேன்.

அடிப்படையை விளங்கினால் தான் வரலாறு தெரியும்  என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் இப்போதுள்ள அறிவாளிகள் ஆசானுக்கே பாடம் சொல்பவர்கள்..அதையும் கேர்ப்போம்.

கடந்த 10 ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் பண்பாட்டு கூறுகளில் நாகரீகம் என்ற போர்வையில்  மோசமான் பொதுசசேதங்கள் பாழ்பட்டு உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என் ஆய்வும் இலக்கும் தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?

நானும் நாகரீகம் என்ற புதுமைக்குதான் புகுந்துள்ளேன். காரணம் தேவையானதை கூட்டி  பழமையை வைத்து பாராட்டுவது ஒரு வகை. இரண்டாம் வகை பழமையை விட்டு விலகி அதிநவீன நாகரீக அல்லது பிறர் இன பண்பாட்டு கூறுகளை சேர்த்து நமது ஆதித தமிழர் பண்பாட்டு சிறப்புகளை ஒதுக்கிவிடுவது இன்னொரு விதம்.

இப்ப மலேசியத் தமிழர்கள் ஓரளவுக்கு நாம் எங்கு நிற்கிறோம் என்று புரிந்து இருக்கும்.! அவர் அவர் பயிற்சிக்கும் எழிசிக்கும் விட்டு விடுகிறேன்.

புதுமை மூர்க்கத்தனமும் சினிமா கேளிக்கை கலப்பும் ” பேஷன் போட்டிகள் ” பேரில் பேய்கள் நாகீகம் என்று சொல்லும் அளவிற்கு இப்போதைய நடப்புகள் உள்ளது. திருமண மணப்பெண் விருந்து நிகழ்வில் மேடையில் மணமகனை கட்டிபிடித்து பிடித்து காதல் டூயட் பாடுமளவிற்கு நாகரீகம் “சில்க் ஜில்லாவில்” வெள்ளையன் உடையில் சீனர் சிங்க ஆட்டம்ம்வரை மலேசியாவில் கல்ப்பியல் பண்பாட்டு கொலை வெறிகள் அரங்கேறி வருகிறது. ஆனால் இதரவர்கள் நம் கலாசார உடைகளை  கொஞ்சமாவது கோர்த்துக்கொண்டார்களா என்றல் பஞ்சம் தான் பரிதேசிக்கிறது.

தமிழர் நாட்டின் பண்பாட்டு சீரழிவுகள் சினிமாவில் மற்ற மாநில மாயைகளால் உரு மாறி உள்ளதை பார்க்கிறோம். ஆனால் கட்டுப்பாடுகள் மிகுந்த தூயத்தமிழர்களின்  வாழ்வியல் பழக்க வழக்க பழமை பண்புகள் சென்னையில் கூட இன்னும் மேலோங்கி உள்ளது.

நான் என் கண்களை கலக்கிய சிங்கப்பூர் மற்றும் மலேசியா தமிழர்களை பற்றிய அடங்காத்தன ஆடம்பர அநாகரீக பண்பாட்டு சிதைவுகளை அலச உள்ளேன்.

இதற்காக தமிழர்கள் அனைவரும் இப்படி பாழ் குழியில் விழுந்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. இருந்தும் சில குடுபங்களில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகளின் எரிச்சலை மீறி நாகரீக படி தாண்டும் தமிழ்பபத்தினிகளை காசு வாங்கி இந்த அலங்காரிகள் அசிங்கப்படுத்தும் கோலத்தை கொஞ்சம் கலைத்துப்பார்க்க வேண்டும். இது நமது உரிமையும் கூட !

சினிமா சீர்கேட்டால் இந்த பரிதாபம் என்றால், அதை நான் ஒத்துக்க முடியாது காரணம் சங்கீதம் ,பாரத நாட்டியம் ,பிற நவீன நடன பள்ளிகள் கூட தமிழர் இலக்கண மரபுடந்தான் பாடங்கள் நடக்கின்றன. இடையில் சினிமா இயக்குனர்கள் இவர்களை விற்பனை பொம்மைகளாக கவர்ச்சி உருவாக்க  ஆடைகள் போட்டு ஆட விடுவதை வீட்டில் இருக்கும் ரசிக மணிகள் வீட்டுக்கும் விழாவுக்கும் புகுத்தும் விந்தையைத்தான் தமிழர் சமூகம் நிந்திக்க வேண்டும்.

நம் நாட்டில் மலாய் சகோதரர்களின் திருமண விழாவுக்கு  போனால் அவர்களின் உடை நாகரீகம் தெய்வீகமாக உள்ளது ..அனால் நமது பெண்களின் உடையில் பல கலப்புகள்?

நான் தமிழர்களின் பத்துப்பாட்டில் பதினெண்கீழ் கணக்கியல தமிழர்களின் பழமை கணக்கிற்கு போங்கள் வாழுங்கள் என்று சொல்ல வரவில்லை. அந்த கோடுகளையும் சேர்த்து புதிய கட்டுபாடான உருப்படிகளை அணியுங்கள் அழகு பாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.

உடைகளை மட்டும்தான்  மனிதன் பண்பாட்டுக்கு முதல் கூறாக காண்கிறான். மற்றது அறம் சாந்த சம்சாரம். சமீபத்தில் ஒரு தமிழ் ஆசிரியரின் கேள்வியை பாருங்கள்” திருவள்ளுவர் தமது குரல்களில் எங்கேயும் ஒருத்தனுக்கு ஒருத்தி” என்று சொல்லி உள்ளாரா ? என்ற கேள்வியை கேட்டு வைத்தார். யாரும் பதில்  சொல்லவில்லை ! திருக்குறளில் எத்தனயோ வாழ்வியல் அறம் உண்டு இவர் கொச்சையாக இந்த விபரீத ஆசைக்கு அடிமையாகி நம் பண்பாட்டை குலைத்துளார்.  இது  (மனிதம்) ஒரு வித பண்பாட்டியல் மனிதம் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்? குயில் போல மனைவியும் குரங்கு போல கூத்தாலும் வைத்துக்கொள். ஆனால் மனை சாட்சி என்ற மனைவியால்  வாழ்வியலை திருவள்ளுவர் பல குரல்களில் சொல்லி உளார். அதுதான் பண்பாட்டுக்கல்வி ஒழுக்கம் என்று அந்த ஆசிரியர்க்கு இப்போது சொல்வேன்.

தலைமுறை இடை வெளி எப்போதும் இலாத அளவுக்கு இப்போது அகலமாகிவிட்டது.  கடந்த கால சமுதாயம்,நிகழ் கால சமுதாயம் இருக்கட்டும் .எதிர்கால சமுதாயம் என்பதை  சமரச சகிப்புகள் என்பதா என்ற முச்சந்தியில் யோசிக்கிறோம். நமது தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை கட்டி காப்போமா அல்லது அது ஒரு சலுகை… வந்தால் வரம்பு இல்லையேல் குடும்பத்தில் வம்பு என்று விட்டு ஒதுங்கி போவோமா என்பதே இன்றைய கேள்வி?

ஆனால் அக்கறை உள்ள ஒரு தொன்மையான இனத்தில் பண்பாட்டு அழகும் அடையாளமும் ஒரு சிறுபான்மையிரனால் கெடுமானால் பெரும்பாமை தமிழர்கள் ஏமாளிகளாக முன்பு போல பல வற்றை இழந்த இழி நிலைக்கு போவது நமது கோழைத்தனம் என்பேன்!

நமது சமயம் ,நமது கலாச்சாரம் ,நமது பண்பாடுகள் , நமது நாகீகம் , நமது இனம் , நமது மொழி ,நமது வாழ்வியல் அழகுகளை திரும்ப திரும்ப சொல்வது நமது கடைமையாகும்.

-பொன்.ரங்கன்