தெய்வச் சிலைகளை உடைத்தவருக்கு ‘இவ்வளவு எளிய தண்டனையா?’

mildபெளத்த, இந்து  தெய்வச் சிலைகளை  உடைத்த  முகம்மட்  பிர்டோஸ்  சைட்டுக்கு  நீதிமன்றம்  வழங்கிய ‘எளிய தண்டனை’ பலருக்கு  வியப்பளிக்கிறது.

இஸ்லாத்துக்கு  எதிராகக்  குற்றமிழைத்தோருக்கு  வழங்கப்பட்ட  தண்டனையுடன்  ஒப்பிட்டால்  பிர்டோஸுக்கு  வழங்கப்பட்ட  தண்டனை “பொருத்தமற்றதாக”  தோன்றுகிறது  என  ஷம்சேர்  சிங்  திண்ட்  கூறினார்.

தனியார்  கல்லூரில்  விரிவுரையாளராக  பணியாற்றும்  ஷம்சேர், கடந்த  செப்டம்பரில்  ஹரி  ராயா  கொண்டாட்டம்  பற்றி  முகநூலில்  முஸ்லிம்களின்  மனதைப் புண்படுத்தும்  வகையில்  பதிவிட்டிருந்ததற்காக  செள  முன்  ஃபாய்  என்பாருக்கு  வழங்கப்பட்ட  தண்டனையைச்  சுட்டிக்காட்டினார்.

செள குற்றத்தை  ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொண்ட  அவருக்கு 1998 தொடர்பு, பல்லூடகச்  சட்டத்தின்  பகுதி 233(1) (ஏ)-இன்படி, அச்சட்டத்தின்கீழ்  வழங்கப்படும்  கூடினபட்ச  தண்டனையான ஓராண்டுச்  சிறைத்  தண்டனை. விதிக்கப்பட்டது.

“இப்படிப்பட்ட  முரண்பாடான  தீர்ப்புகள் ஒரு சமயம்  மற்ற  சமயங்களைவிட  மேலானது, அதுவே  அதிகம்  பாதுகாக்கப்படுகிறது  என்று  தப்பாகக்  கருதுவதற்கு  இடமளித்து  விடலாம்”,  என்றவர்  கூறினார்.