ஆர்ஒஎஸ் மீது சினமடைந்துள்ள மஇகா தலைமைச் செயலாளர் உண்ணாவிரதம் தொடங்குகிறார்

 

MIC-kumarநாளை பிற்பகல் மணி 2.00 க்கு புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்தின் தலைமையகத்தில் மஇகாவின் புதிய தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் கட்சியைக் காப்பாற்றுவதற்காக உண்ணாவிரதம் தொடங்கவிருக்கிறார்.

சங்கங்கள் பதிவாளரை சந்திப்பதற்கு குமாருக்கு வாய்ப்பளிக்க ஆர்ஓஎஸ் மறுத்து விட்டதாக தமிழ் நாளிதழ்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

“மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய தகராறு தீர்க்கப்படும் வரையில் ஆர்ஒஎஸ் எந்த ஒரு புதிய நியமனத்தையும் அங்கீகரிக்கும் நிலையில் இல்லை”, என்று ஆர்ஒஎஸ் அதன் கடிதத்தில் கூறியுள்ளது.

தமது உண்ணாவிரதம் “அவர்கள் (ஆஒஎஸ்) தங்களுடைய புலன்விசாரணைக் குழு, தலைமை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படும் வரையில் தொடரும்”, என்று குமார் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள டெக்ஸ்ட் செய்தில் கூறியுள்ளார்.