சிருல் வழக்கில் ஆஸ்திரேலியாவைக் குற்றம் சொல்வது நியாயமல்ல

aussieசிருல் அஸ்ஹார்  உமர்  விவகாரத்தில்  ஆஸ்திரேலியாவைக்  குறை  சொல்வது  நியாயமாகாது   என்கிறார்  ஆஸ்திரேலிய அரச  வழக்குரைஞர்  மார்க்  ட்ரோவல். சிருல்  நாட்டைவிட்டு  வெளியேற  முடியாதபடி  கடுமையான  பிணை  நிபந்தனைகளை  மலேசிய  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்கள்  போட்டிருக்க  வேண்டும்.

மேற்கு  ஆஸ்திரேலியாவில்  வழக்குரைஞர்  தொழில்  செய்யும்  ட்ரோவல்,  அல்டான்துன்யா  ஷரீபு  கொலை  வழக்கில்  கூட்டரசு  நீதிமன்றத்தில்  தீர்ப்பு  திருத்தப்படும்  சாத்தியத்தை  மலேசிய  அரசுத்தரப்பினர்  எதிர்பார்த்திருக்க  வேண்டும்.

“சிருல்  தப்பியோடும்  அபாயம் இருப்பதையும்  உணர்ந்திருக்க  வேண்டும். அவர் நாட்டைவிட்டு  வெளியேறக்  கூடாது  என்று  கடுமையான  நிபந்தனை  போட்டிருக்க  வேண்டும். வெளியேற  முடியாதபடி கடப்பிதழை  ஒப்படைக்கும்படி  கூறியிருக்க  வேண்டும்.

“இவை  எதுவும்  செய்யப்படவில்லை. அதனால், சிருல்  ஒரு  வழக்கமான வர்த்தக  விமானத்தில்  வெளியேறுவது  வசதியாக  போய்விட்டது. அவர் இங்கிருப்பதை  ஆஸ்திரேலியாவும்  விரும்பவில்லைதான். திருப்பி  அனுப்பவே விரும்புகிறோம். ஆனால், நடந்ததற்கு  எங்களைக்  குறை  சொல்வது  நியாயமல்ல.  அவரைத்  தப்பியோட  விட்டவர்கள்  நாங்கள்  அல்ல”, என  மலேசியாகினிக்கு  அனுப்பிய  மின்னஞ்சலில்  அவர்  கூறினார்.