“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

india_populationசர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார்.

தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிலிப் ஏ.மின் பேசியது:இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது. எய்ட்ஸ் போன்ற தொற்றும் நோய்களைக் காட்டிலும் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

2025-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 35 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து சர்க்கரை நோய் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

-http://www.dinamani.com

TAGS: