சவுதி அரேபியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள்: ஜேர்மனியின் அதிரடி முடிவு

army_001சவுதி அரேபியாவில் நிகழும் அசாதாரணமான நிலை காரணமாக அந்நாட்டிற்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த ஜேர்மனியின் தேசிய பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரசாங்கத்திடமிருந்து ஆயுத ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் வந்தால், அவற்றை ஜேர்மனி அரசு நிராகரிக்கும் அல்லது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் என ஜேர்மனி பத்திரிக்கை ஒன்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் தற்போது உறுதியற்ற, அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவுவதால் அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது ஏற்புடையதாக இருக்காது’ என தேசிய பாதுகப்பு அமைப்பின் அதிகாரிகள் Chancellor Angela Merkel, Vice Chancellor Sigmar Gabriel உள்ளிட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஜேர்மனியிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முக்கிய நாடாகும். 2013 ஆம் ஆண்டில் சுமார் 400 மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் நிகழும் மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிராக நடக்கம் வன்முறைகள், கடினமான சட்ட திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி அந்நாட்டிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த ஜேர்மனி அரசு முடிவெடுத்திருக்கலாம் என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும் அந்த பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் 78 சதவிகித ஜேர்மனியர்கள் சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் 60 சதவிகித ஜேர்மனியர்கள் சவுதியுடன் வர்த்தக பரிமாற்றங்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளதாக அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

-http://world.lankasri.com