‘அக்கறையற்ற’ கிளந்தான் அரசாங்கம், பிஎஸ்எம் சாடல்

raniகிளந்தான்  அரசு  இயற்கைச்   சுற்றுச்சூழல்  குறித்து “கவலை கொள்வதில்லை, அக்கறை  காட்டுவதில்லை”  என  பார்டி  சோசலிஸ்  மலேசியா (பிஎஸ்எம்)  சாடியுள்ளது. அதுதான்  அம்மாநிலத்தில்  வெள்ள  நிலைமை  மோசமானதற்குக்  காரணம்.

“அந்த  அரசால்  மலைச்சாரல்களில்  பொறுப்பற்ற   முறையில்  மேற்கொள்ளப்பட்ட  மேம்பாட்டுப்  பணிகளின் கடும்  விளைவுகளை  2014 வெள்ளத்தின்போதே  கிளந்தான்  மக்கள்  அனுபவித்தார்கள். அப்போதே  மணலால்  நிரம்பப்பெற்ற  ஆறுகள் பெருக்கெடுத்து  ஓடி  நகரங்களை  மூழ்கடித்தன.

“முன் எப்போதுமில்லாத  அளவுக்கு  மழை பெய்திருப்பதாக  நிபுணர்கள்  கூறுகிறார்கள். ஆனால், மழைச்சாரல்  மேம்பாடுகள்தான்  வெள்ளத்தை  மோசமாக்கின”, என  பிஎஸ்எம்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ராணி  ராசையா ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“காடுகள்  தொடர்பில்  பாஸ்  மாநில  அரசின்  கொள்கை  என்னவென்பது  தெளிவாக  தெரியவில்லை. மரங்கள்  கண்டபடி  வெட்டப்படுகின்றன. மறுநடவும்  செய்யப்படுவதில்லை. நீண்ட  காலமாகவே  இப்படி  நடந்து  வந்துள்ளது.

“முதிர்ந்த  மரங்களைத்தான்  வெட்ட வேண்டும். கட்டாயமாக  மறுநடவு  செய்ய  வேண்டும்  என்ற  சட்டதிட்டங்கள் இருப்பதாக  தெரியவில்லை”, என்றாரவர்.