நைஜீரியாவில் நடைபெற்ற சண்டையில் 200 பேர் பலி!

nigeria_200dead_001நைஜீரியாவில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே நடைபெற்ற சண்டையில் 200 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கிராமங்களில் புகுந்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து செல்கின்றனர். கொன்று குவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான மைதுகுரி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதை தொடர்ந்து ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. போர் விமானங்கள் குண்டு வீச்சும் நடத்தின.

அச்சண்டையில் இரு தரப்பிலும் 200 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே இப்பகுதியில் உள்ள மங்குமனா நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

வருகிற பிப்ரவரி மாதம் நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை சுமூகமாக நடத்தவும், போகோஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்குவதிலும் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

அதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நைஜீரியா சென்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

-http://world.lankasri.com