பிபிஎஸ் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை எதிர்த்து பினாங்கு வழக்கு தொடுக்கிறது

ppsபினாங்கு  அரசு,  அதன்  தன்னார்வ  காவல்  படை(பிபிஎஸ்)  சட்டவிரோதமானது  என்ற  குற்றச்சாட்டை  நீதிமுறை  மேலாய்வு  செய்ய  வேண்டும்  என்று  மனுச்  செய்து  கொண்டிருக்கிறது.

10-அம்ச- அடிப்படையில்  மேலாய்வு  செய்யக்  கேட்டுக்கொள்ளும்  அம்மனு  இன்று பினாங்கு  உயர்  நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டது.

அம்மனு   உள்துறை  அமைச்சு, போலீஸ்  படைத் தலைவர்,  மலேசிய  அரசாங்கம்  ஆகியோரை  எதிர்வாதிகளாகக்  குறிப்பிட்டுள்ளது.

பிபிஎஸ்  தான்  “அரசியல்  பலிகடா”  ஆக்கப்பட்டிருப்பதாகக்  கருதுகிறது  என  பினாங்கு  முதலமைச்சர் லிம்  குவான்  எங் கூறினார்.

“பிபிஎஸ்  பினாங்கு அரசால்  1976-ஆம்  ஆண்டு  ஊராட்சிச்  சட்டம்   பகுதி 101(v)-இன்கீழ்  சட்டப்படி  அமைக்கப்பட்டது  என  அறிவிக்க  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்திருக்கிறோம்.

“பிபிஎஸ்  1966  சங்கச்  சட்டத்தின்படி  அமைக்கப்பட்ட  ஒரு  சங்கமல்ல”, என்றாரவர்,

அம்மனு  கடந்த ஆண்டு  நவம்பர் 3-இல், பிபிஎஸ்  சட்டவிரோத  அமைப்பு  என்று  உள்துறை  அறிவித்ததைத்  தள்ளுபடி  செய்ய  வேண்டும்  எனவும்  கேட்டுக்கொண்டிருப்பதாக  லிம்  கூறினார்.