அன்வார் இல்லையென்றால் பாஸ்- டிஏபி பிளவு மேலும் மோசமடையும்

dap-pasபிப்ரவரி 10-இல், பக்கத்தான்  ரக்யாட்  தலைவர் அன்வார்  இப்ராகிம்  குற்றவாளி  எனத்  தீர்ப்பாகி  உள்ளே  போய்விட்டால்  பாஸ், டிஏபி  உறவுகள்  படுமோசமாகி  விடும்.

அம்னோவும்  பாஸும்  சேர்ந்து  ஒற்றுமை  அரசாங்கம் அமைக்கும்  சாத்தியம்  பற்றிக்  கருத்துரைத்தபோது  மசீச  இளைஞர்  தலைவர்  சோங்  சின்  வூன்  இவ்வாறு  கூறினார்.

“முன்பு  அப்படி  நடந்ததுள்ளது. மறுபடியும்  நடக்கலாம்.

“இப்போது  அதற்குத்  தடையாக  இருப்பவர்  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ். அவர்  அதை(ஒற்றுமை  அரசாங்கத்தை) எதிர்க்கிறார்.

“அன்வார்  சிறைக்கு  அனுப்பப்பட்டால்  கூட்டணிக்  கட்சிகளை  ஒன்றிணைக்கும்  முக்கியமானவரை  பக்கத்தான்  இழந்துவிடும்.

“பாஸும்  டிஏபியும்  பிரியலாம். அப்போது  அம்னோவையும் பாஸையும்  கொண்டு  கிளந்தானில்  இன்னொரு  கூட்டணி  அமைக்கலாம்”, என்று  சோங்  கூறினார்.