லிபியா நட்சத்திர ஹொட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் பலி..பிணையக் கைதிகளாக சிக்கிய பொதுமக்கள்

libia_hotelattack_001லிபியா தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 9 பேரை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

கடற்கரை ஓரமாக உள்ள இந்த விடுதியில் நுழைந்த தீவிரவாதிகள் முதலில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த சத்தம் கேட்டது விடுதியில் தங்கியிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேறும் படி மேலாளர் அபே தகவலளித்துள்ளார்.

மேலும், உடனடியாக வெளியேறிய பயணிகளுடன் சேர்ந்து அபேவும் வெளியே வந்துள்ளார்.

சில வாடிக்கையாளர்கள் தப்பினாலும் நிறைய பேர் இன்னும் தீவிரவாதிகளிடம் பணயக் கைதிகளாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இரண்டாம் இணைப்பு:

இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

மேற்கு லிபியாவின் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை டிவிட்டர் இணையதளத்தில் எங்கள் தீவிரவாதிகள் ஓட்டலை முற்றுகையிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என சைட்(SIET)உளவு கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com