ஜோதிகா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

jothikaமஞ்சுவாரியர் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சு வாரியர் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். மேலும் ரகுமான், அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது. முதலில் கிளைமாக்ஸ் காட்சியை டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ் படமாக்கினார்.

அதன்பின்னர் 46 நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினர். இறுதிக்கட்ட படப்பிடிப்பை சோழிங்கநல்லூரில் முடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

-http://123tamilcinema.com