QZ8501: தேடும் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரலாம்

seaஏர் ஏசியா விமான விபத்தில் பலியானவர்களைத் தேடும்  முயற்சி,  மேலும்  சடலங்கள்  கிடைக்கவில்லையானால்  அடுத்த  சில  நாள்களில்  முடிவுக்கு  வரலாம்.

டிசம்பர் 28-இல், சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூர்  நோக்கிப்  பறந்துகொண்டிருந்த  ஏர்பஸ் ஏ320 ஜாவா கடலில்  விழுந்தது. அதில்  இருந்த  162 பேரும்  உயிரிழந்தனர்.

இதுவரை 70  சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின்  தேசிய தேடல், மீட்பு  நிறுவனம்  மேலும்  ஒரு  வாரம்  சடலங்கள்  எதுவும்  தென்படுகிறதா  என்று   தேடிப்  பார்க்கும்.

“ஒன்றிரண்டு  சடலங்கள்  கிடைக்குமானால்  தேடும்  நடவடிக்கை  தொடரலாம்”, என அந்நிறுவனத்தின்  தலைவர்  பிரான்ஸிஸ்குஸ் பம்பாங்  சோயிலிஸ்ட்யோ  கூறினார்.

ஒரு  மாதமாக  தேடும்  பணியில்  உதவிய  இந்தோனேசிய இராணுவம்,  நேற்று தேடும்  நடவடிக்கையை  நிறுத்திக்  கொண்டது.