மஇகா சர்ச்சையில் சமரசப் பணியாற்ற வந்துள்ளார் துணைப்பிரதமர்

dpmமஇகாவில்  கட்சிச்சண்டை  பெரிதாகி  பதிவு  இரத்தாகும்  அபாயமும் ஏற்பட்டுள்ள  வேளையில்  பிஎன்  தலைவர்கள்  அதில்  தலையிட்டு  சண்டையிடும்  தரப்பினரைச்  சமாதானப்படுத்த  முடிவு  செய்துள்ளனர்.

சமரசப்  பணியில்  ஈடுபடப்  போகின்றவர்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்.

“நடப்பு  நிலைமையில்  நாங்கள்  தலையிடுவது  அவசியமாகும். விவகாரம் தானாகவே  தீர்ந்துவிடும்  என்று பார்த்தால்   தீராதுபோல்  தெரிகிறது”, என்று  கூறிய  முகைதின்  போட்டித்  தரப்புகள்  அமைதி  காக்க வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

மற்றவற்றுடன், சங்கப்  பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்)-யின்  பரிந்துரைகளை  ஆராய்ந்து  மேலே  என்ன  செய்யலாம்  என  ஆலோசிக்கப்படும்.  எது  செய்தாலும்  அது  கட்சியின்  அமைப்புவிதிகளுக்கு  ஏற்ப  இருப்பது  உறுதி  செய்யப்படும்  என்றாரவர்.

இதேபோல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான  பிணக்கைத்  தீர்ப்பதிலும்  நடுவர்  பணி  ஆற்றுவாரா என்று முகைதினிடம்  வினவப்பட்டது.

அதற்கு  அவர், “அது  வேறு  கதை”, என்று  மறுமொழி  கூறினார்.