அன்வாரின் தீர்ப்பு நாளன்று பேரணிகள் இல்லை

rallyபிகேஆர்,  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கின்  மேல்முறையீட்டின்மீது  கூட்டரசு  அரசாஙகம்   தீர்ப்பு  வழங்கும்  பிப்ரவரி  10-ஆம் நாள்  பேரணி  எதையும்  நடத்தாது.

எதிரணித்  தலைவரான  அன்வார்  ஒருவேளை  சிறைக்கு  அனுப்பப்பட்டால்  பிகேஆர்  “எதிர்த்துப்  போராடும்”  என்று  சுங்கை  பட்டாணி  எம்பி  ஜோகாரி  அப்துல்  கூறினார்.

“போராடுவோம். அதற்குப் பல  வழிமுறைகள்  உள்ளன.  நாங்கள் தேர்தல்களைப்  பயன்படுத்திக்  கொள்வோம்”,எனச்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவர்  கூறினார்.

“அதைத்தான்  செய்வோம். அதற்கு  அப்பால்  எதையும்  செய்யப்  போவதில்லை”, என்று  கூறியவர்  முன்பும்  இப்போதும்  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டு  என்பது  “அரசியல் தந்திரம்”தான்  என்றார்.