இலங்கை செல்ல தயாரான நிலையில் 70 சதவீத அகதிகள்!

refugees_in_tamilnadu_001தமிழகத்தில் வாழும் அகதிகளில் 70 சதவிகிதம் பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மீனவர் பிரச்சனை மற்றும் இலங்கை அகதிகளை திரும்ப அனுப்புவதற்கான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம், அதன் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் எம்பி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஐநா அகதிகள் மறுவாழ்வுத்துறை, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பின்னர் சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 103 முகாம்களில் 1.20 லட்சம் இலங்கை அகதிகள் உள்ளனர்.

இதில் 70 சதவீதம் பேர் இலங்கை செல்லவும், 20 சதவீதம் பேர் இங்கேயே இருக்கவும், 10 சதவீதம் பேர் இலங்கையில் மறுவாழ்வு கிடைக்கும் என்றால் செல்கிறோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்திய அரசு யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பி வைக்காது என்றும் இதுதொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், தற்போது இலங்கை வடகிழக்கு பகுதியில் இன்னமும் சுமூகமான சூழ்நிலை ஏற்படவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அங்கு நிலைமைகள் மாறும் வரை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: