விலைகள் ஏற்றம்: டிஎன்பி, நஜிப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

pricekulaimpஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பொருள்களின் விலையைக் குறைக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் அந்நடவடிக்கையை முதலில் டிஎன்பி மற்றும் பிரதமர் நஜிப்புடன் தொடங்க வேண்டும் என்று டிஎபி கேட்டுக் கொண்டுள்ளது.

“நான் அவரின் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். ஆனால், அவர் எந்த அளவிற்கு அதில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்கு கச்சா எண்ணெயின் விலை உலகளவில் சமீபத்தில் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைக்க மறுக்கும் டிஎன்பிக்கும் நஜிப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன்”, என்று டிஎபி கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் அரசாங்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக மின்சார கட்டணத்தை 16 விழுக்காடு உயர்த்தியது என்று கூறிய தியோ, கடந்த சில மாதங்களாக எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டிருந்த போதிலும் டிஎன்பி மின்சாரத்தின் கட்டணத்தைக் குறைக்கும் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்றாரவர்.