ரோஸ்மாவின் தலை அலங்காரத்தில் அக்கறை காட்டும் அமட் மஸ்லானுக்குக் கண்டனம்

hairdoமக்களுக்குக் கவலைதரும்  பிரச்னைகளில்  கவனம்  செலுத்தாமல்  ரோஸ்மாவின் சிகை  அலங்காரத்தில்  அக்கறை  காட்டும்  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானை பிகேஆர்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  சாடினார்.

பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்,  வீடு  வந்து  தலை அலங்காரம்  செய்து  விடும்  சேவைக்கான கட்டணம் ரிம1,200 ஆகக்  கூடியிருப்பதாகக் குறைபட்டுக்  கொண்டதை   ஆராய்வதாக  அஹ்மட்  மஸ்லான்  கூறியிருந்தார்.

“மக்களின்  கல்வியறிவு,  உடல்நலம்  ஆகியவற்றுக்கு  அல்லாமல்  அஹ்மட்  மஸ்லான்  பிரதமரின்  முடி அலங்காரத்துக்கு  முன்னுரிமை  கொடுப்பது  ஏன்?”, என  நுருல்  இஸ்ஸா வினவினார்.

பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)-யை  அமல்படுத்தினால்  மருந்துகளின் விலை  உயரும்  என்று மருந்தியல்  தரப்பினர்   பல மாதங்களாகக்  கூறி  வருவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.