லீ குவான் இயு இன்னமும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

kuanசிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ  மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை  பெற்று  வருவதாக  அந்நாட்டுப்  பிரதமர்  அலுவலகம்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்  தகவல்கள்  பரவியதை  அடுத்து  இந்த  அறிக்கை  வெளியிடப்பட்டது.

லீ,91, நிமோனியா காய்ச்சலால் கடந்த பிப்ரவரி 5 -ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

“அவரின் மருத்துவர்கள்  அவருக்கு  மீண்டும்  எண்டிபயோடிக்ஸ் கொடுக்கத்  தொடங்கி  அணுக்கமாகக்  கவனித்து  வருகிறார்கள்”, என்று  அந்த  அறிக்கை  கூறிற்று.