சிருல் பற்றிக் கருத்துரைக்க ஆஸ்திரேலிய அமைச்சர் மறுப்பு

duttonஆஸ்திரேலிய  குடிநுழைவு, எல்லைப்  பாதுகாப்பு  அமைச்சர்  பீட்டர்  டட்டனிடம் முன்னாள் போலீஸ்   கார்ப்பரல் சிருல்  அஸ்ஹார்  உமர்  பற்றி வினவியதற்கு  அவர்  பதில்  சொல்ல  மறுத்தார்.

“நடப்பு  விவகாரங்கள் பற்றி  ஆஸ்திரேலிய  அமைச்சர்கள்  கருத்துரைப்பதற்கில்லை”, என்றாரவர்.

சட்டம் அதற்கு  இடமளிப்பதில்லை என்பதுடன்  சம்பந்தப்பட்ட  விவகாரம் பற்றிக்  கருத்துரைப்பது  தப்பெண்ணத்தை  உருவாக்கிடலாம்  என்றார்.

டட்டன்  இன்று  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியைச்  சந்திப்பதற்காக  புத்ரா  ஜெயாவில் உள்ள  உள்துறை  அமைச்சுக்கு  வந்திருந்தார்.

சிருல், சிட்னி  குடிநுழைவு  தடுப்பு மையத்தில்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்.