ஆக்சன் களத்தில் உதயநிதி ஸ்டாலின்!

நண்பேன்டா படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் கெத்து.

‘மான் கராத்தே’ படத்துக்குப் பிறகு திருகுமரன் இப்படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இவர்களுடன், கருணாகரன், விக்ராந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரெட்ஜெயன்ட் மூவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் இதனை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், கருணாகரன் கலந்துகொண்டு இதில் நடித்து வருகின்றனர்.

உதயநிதி இதற்குமுன் தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய இரண்டு படங்களிலும் சாப்ட் ஹீரோ சப்ஜெட்டில் நடித்திருந்தார். ஆனால் கெத்து திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக ஆக்சன் களத்துக்கு மாறியிருக்கிறாராம். இதனை படத்தின் இயக்குனர் திருகுமரன் தெரிவித்துள்ளார். இதனிடையே உதயநிதி நடித்த நண்பேன்டா படம் ஏப்ரல் 2 தேதி திரைக்கு வரவிருக்கிறது.

-http://www.dinamani.com