தமிழர் பதிவு – கண்ணில் பட்ட “ரீட் மனு” 1956 கண் திறக்க வேண்டும்

contentwriting_1Reid Commision என்பது மலாயா சட்ட அமைப்பின் சிறப்பு குழுவாம்.
தமிழர்களின் ” தமிழர்” அதாவது மலேசியத் தமிழர் என்ற பதிவு பரிந்துரை என்ன ஆனது என்று போகும் முன், தீர்மானம் 7 க்கு போவோம்.

தீர்மானம்- 7 , இப்படி வாசிக்கிறது….” மலாயன் இந்தியன் காங்கரஸ் எனும் அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டு இந்தியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியென தன்னை கூறிக்கொள்கிறது.

ஆனால் உண்மை நிலை அதுவன்று. காரணம் இதன் அமைப்பாளர்கள் எவரும் இங்கு பிறந்தவர்களோ மலாயாவின் போராட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தொண்டு ஆற்றிவர்களும் அல்லர். மலாயா முழுதாக விடுதலை பெற்றப்பின் தோன்றியவர்கள்.

மலாயன் இந்தியன் காங்கிரஸ் இந்நாட்டு இந்தியர்களின் எனும் போலிக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்லர் .இவர்களிடமுள்ள பண வலிமையால் இங்குள்ள இந்தியர்கள் கட்டுப்படுதப்பட்டுள்ளனர்”

தீர்மானம் – 8
” jus soli ஜூஸ் ஜோலி எனும் ரீட் மனு செயலகத்தினை புரியாமல் மலாயன் இந்தியன் காங்கிரஸ் வரவேற்கவில்லை . ஆகவே செயலகத்தின் தேவையினை பொது மக்களுக்கு உணர்த்த வேண்டியது ரீட் கமிசிணனின் பொறுப்பாகும். இந்த நாட்டில் தொடந்து 5 ஆண்டுகள் வாழும் பிற நாட்டவர்கள் மலாயாவின் குடயுரிமை பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இதற்கு வழி வகுப்பது ஜூஸ் ஜோலி செயலகமாகும்.” ஆனால் நம்மவர்கள் இங்கு பிறந்தும் அல்லோல சுத்தல்?

தீர்மானம் -10
“இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ,ஆகவே மலாயா பல்கலைகழகத்தில் தமிழ்த்துறை ஒன்றினை உருவாக்கிட வேண்டும் பிற துறைகளுக்கு வழங்கப்படும் அனைத்துவித வசதிகளும் வாய்ப்புகளும் தமிழ் த துறைக்கும் வழங்கிட வேண்டும் ” ஆனால் அமைந்ததோ இந்தியன் துறை.?

ரீட் கமிசினிடம் வழங்கப்பட்ட இன்னும் 17 தீர்மானங்களை கொண்டுள்ளது.( எழுத்தாளர் சீ. அருண் தமிழர் தடங்கள் வரலாற்று ஆவணம் வாங்கிப்படியுங்கள் ) அதில் நமது முன்னோர்கள் வி. கோவிந்தசாமி / எஸ் .சண்முகம் /ஜி. நடேசன் / எஸ் ராமகிருஷ்ணன் /கே ஆர் ஆறுமுகம்/ ஆகிய ஐவர் இப்பரிந்துரையில் கையெப்பம் இட்டுள்ள்ளனர்.

அருண் அவர்களின் ஆய்வு என்றாவது விழிப்புப பெற வேண்டும். காலம் வரும்.
இதில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத தலைவர- நான் பெரிதும் மதிக்கும் தமிழ் ஆசிரியர் ஐயா இர .ந . வீரப்பன் பங்கு அல்லது அவரின் தீமானம் அவரின் 30. 6. 56 கடிதம் நம் இதயத்தில் ஒரு அதிர்வை தருகிறது. அதையும் படியுங்கள். இவரின் கடிதமும் இவர் தந்த “தமிழர்” என்ற பதிவும் பெற வேண்டும் என்ற பரிந்துரைகளும் இலண்டன் ஆவணக் காப்பகத்தில் லண்டன் Record centre ல் வைக்கபட்டுள்ளதாம். யார் இந்தபபுதையலை

நாடுவது, தேடுவது?
இங்கு நம் நாட்டில் எங்கே கிடைக்கும்?

நாடு சுதந்திரம் பெறும் முன்னரே… அதாவது 17.8. 1957 நாள் முதல் மலாயா கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் செயல் பட தொடங்கியதாம்.

அதன் குறிப்புப்படி …. தமிழர்களின் பாதுக்காப்பு குறித்து பல தீர்மானங்களை ஐயா வீரப்பனார் அவர்கள் தீர்மானமாக தந்துள்ளார்கள். அதுவெல்லாம் என்ன ஆனது ? அவர் அன்றே எழுதியுள்ள மதக்கல்வி அவசியமில்லை … சமூகக்கல்வி ,பண்பாடு ,வரலாறு ,இலக்கியம் ,போன்றவை இன்றியமையாதது பற்றியும் விண்ணப்பித்துள்ளார்.

இன்று உயர்க்கல்வி தமிழ் மொழி மோசடிக்கு அன்றே உயிர் தந்துள்ளார். ஆனால் இன்று காபினட் மினிஸ்டர் எல்லாத்தையும் கையில் எடுத்து க்ளவாடுகிறார்.

1956 லேயே வீரப்பனார் அவர்கள் தமிழர் முதலீட்டு உதவித திட்டம்,தமிழர் தொழில் துறை மேம்பாட்டு திட்டம் , குடும்ப நலத்திட்டம் போன்ற தேவைகளையும் மலாயா தமிழர் சங்கம் வழி ஒப்புவித்து உள்ளது.

இப்போ இதற்கெல்லாம் என்ன என்று சிலர் கேப்பீர்கள். தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டுள்ளது என்பதை தெரியவும் …ஹிண்ட்ராப் முயற்சிகள்… DAP , PKR தமிழர் தலைவர்களின் இன்றைய போராட்டம். ம இ காவின் பதவி போர் எல்லாம் எதற்கு? என்று கேட்டு வைக்கவும் நீங்கள் உதவ வேண்டும் என்ற நம்பிக்கைதான்.

இன்று மலேசியாவில் தமிழர்கள் இந்தியர்கள் சார்பு அரசியல் கட்சிகளின் மனிதம் எங்கே எதற்கு பதவி எப்படியெல்லாம் நம்மை புரட்டிப்போடுகிறது என்று பாக்கிறோம். மக்கள் நேயத்தை வளர்க்கும் அரசியல் செய்ய வேண்டியதை விட்டு விட்டு மாண்பு நெறிகளை மறந்து வெறும் மாண்புமிகுகள் வேட்டையில் விலை போகிறார்கள்.

இனம் சார்ந்த இழப்பின் நிதர்சனங்களை நீங்களும் எழுதுங்கள். “எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்” இந்த மறுப்பாளர்கள் திருந்த இழந்த நிஜங்களை எழுப்புவோம்.

-பொன்.ரங்கன்