பினாங்கு எக்ஸ்கோமீது நிந்தனைச் சட்டம் பாய்கிறது

excoஅன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில் கூட்டரசு  நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புமீது  கருத்துரைத்த   பினாங்கு  ஆட்சிக்குழு  உறுப்பினர்  டாக்டர்  அரிப்  பஹார்டின் தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

பிகேஆர் இளைஞர்  துணைத்  தலைவரான  அவரை  போலீசார் இன்று  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்துக்கு  அழைத்து  வாக்குமூலம்  பதிவு  செய்தனர்.

அன்வா ருக்கு  அளிக்கபொபட்ட  தீர்ப்பு  குறித்துத்  தாம்  தெரிவித்த  கருத்து  இணையச்  செய்தித்  தளமொன்றில்  வெளியிடப்பட்டிருந்தது  என்றும்  அதன் தொடர்பில்தான்  இந்த  விசாரணை  என்றும்  அவர்  சொன்னார்..

“குதப்புணர்ச்சி  வழக்கின்  தீர்ப்பின்மீது  நான் தெரிவித்த  கருத்து  பற்றி  விசாரித்தார்கள்.

“எந்தச்  செய்தித்  தளம்  என்பதைக் கூற  இயலாது.  ஏனென்றால்  அதன்மீதும்  விசாரணை  நடக்கிறது”, என அரிப்  கூறினார்.